"லேசான, மிதமான பாதிப்பு உடையவர்களுக்கு ரெம்டிசிவிர் தேவையில்லை"-டெல்லி ஏய்ம்ஸ் இயக்குனர்
லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு ரெம்டிசிவிர் ஊசி தேவையில்லை என்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தேவையில்லாமல் ஊசி போட்டுக் கொண்டால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
90 சதவீத நோயாளிகள் வீட்டிலேயே உரிய நேரத்தில் மருந்துகளை உட்கொண்டு குணமாகி விடும் என்று கூறியுள்ள டாக்டர் குலேரியா, 10 அல்லது 15 சதவீத கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுவதாக தெரிவித்தார்.
Comments